இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்படும்

kotabaya 3
kotabaya 3

தற்போது நிறைவு செய்யப்படாதுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாம் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் பூர்த்திசெய்யவிருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரக்வானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆரம்பித்த பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இரத்தினபுரி அதிவேக வீதி மற்றும் தொடருந்து நிலையம் என்பன தற்போது வரை பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது.

எதிர்வரும் தமது ஆட்சியின் ஊடாக தற்போது அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் இருக்கும் சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு சிறந்த கொள்கை தம்மிடம் உள்ளதாகவும் இலங்கை தேயிலையின் தரத்தை அதிகரித்து சர்வதேச சந்தையில் அதற்கான சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்கும் தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.