கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவையில் மட்டுப்பாடு

train 1
train 1

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயில் தடம்புரண்டதன் காரணமாக, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு ஊடான ரயில் சேவைகள் மஹவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிக விரைவாக குறித்த ரயில் போக்குவரத்தில் ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு – கோட்டையிலிருந்து பயணித்த மீனகயா ரயில் அவுகன உப ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டமை காரணமாக நேற்றிரவு குறித்த ரயில் போக்குவரத்தில் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.