ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கை!

srilankanairlines1
srilankanairlines1

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொரோனா தொற்றால் சர்வதேச ரீதியாக “லொக் டவுண்” நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தெரிவு செய்யப்பட்ட உலகின் பகுதிகளுக்கு பறப்பை மேற்கொண்டே வருகிறது.

இதன்படி“இத்தாலி-மிலன், யுனைடெட் கிங்டம்-லண்டன், ஜப்பான் – டோக்கியோ, மாலத்தீவுகள்- மாலே, ஜெர்மனி- பிராங்பேர்ட், பிரான்ஸ்- பாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியா-சிட்னி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச இடங்களுக்கு விமான பறப்பு தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே இந்த இடங்களுக்கும் அதற்கு அப்பாலும் பயணிக்க விரும்பும் பயணிகள் கொழும்பு, காலி மற்றும் கண்டியில் உள்ள தமது டிக்கெட் அலுவலகத்திலிருந்து அல்லது உங்களுக்கு விருப்பமான பயண முகவரிடமிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, 1979 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடலாம். ” என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.