“தற்சார்பு தாய்நாடு” எனும் வேலைத்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்!

1 7 1
1 7 1

தேசத்தைக் கட்டியெழுப்பும் மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் ஒன்றியம் 29.08.2020 அன்று “தற்சார்பு தாய்நாடு” எனும் வேலைத்திட்டத்தினை கிளிநொச்சியில் ஆரம்பித்தது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக இணைப்பாளர் ச.சுஜிதரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

“தற்சார்பு தாய்நாடு” வேலைத்திட்டத்தினை தமிழ் மக்கள் ஒன்றிய தலைவர் M.A.யோகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தமையினை தொடர்ந்து “தொழிற்கல்வி- ஒருவேலை கற்கை நெறி தொடர்பான விளக்கவுரையினை ஆசிரியர் சயந்தன் வழங்கினார்.

இந்த கற்கை நெறி போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங், CCTV கமெரா, தொலைபேசி திருத்துதல், Web Designing, Web Content Writing போன்ற பயிற்சிகளை ஆரம்பித்து.

குறிப்பிட்ட ஏதாவதொரு பயிற்சியில் தேர்ச்சியுறும் மாணவருக்கு அதுசார்ந்த தொழில் முயற்சியினை உருவாக்கி கொடுப்பதே எமது நோக்கமாகும்.

க.பொ.த சாதாரண தரத்தை நிறைவு செய்து அல்லது க.பொ.த உயர்தரம் நிறைவு செய்து தொழில் தேடும் எமது இளைய சமுதாயத்தை தொழில் முனைவோராக உருவாக்கும் எமது முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்ல ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் யுவதிகள் 30 பேர் வரையில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த செயன்முறை சார் பயிற்சிநெறி எதிர்வரும் 12.09.2020 அன்று பிரத்தியேக பயிற்சி வகுப்புக்களாக ஆரம்பிக்கப்படவிருப்பதால், கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் உங்கள் வரவினை முற்கூட்டியே எம்மிடம் பதிவு செய்யுமாறு தமிழ் மக்கள் ஒன்றியம் கேட்டு கொள்கின்றனர்.