வெளியானது புதிய வர்த்தமானி!

1599364315 IMG 20200906 091612 crop 3171
1599364315 IMG 20200906 091612 crop 3171

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (04) வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை; தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48யின் கீழ் பயங்கரவாதத்தை
தடுக்கும் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக – தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.