குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபரால் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 5 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 5 1

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பொடி லெஷி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கடி சில்வாவிடமும் கொஸ்கொட தாரக என அழைக்கப்படும் கீர்த்தி தாரக பெரேரா விஜேசேகரவிடமும் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 5 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அந்த சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்த கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் தமக்கான வசதிகளை அதிகரிக்குமாறு கோரி உணவு தவிர்ப்பில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் ஆராய்வதற்காக சிறைச்சாலை தலைமையகத்தின் 5 அதிகாரிகளும் பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகரும் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது பொடி லெஸி மற்றும் கொஸ்கொட தாரகவும் குறித்த அதிகாரிகளுடன் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.