பெரும் நிகழ்வுகளுக்கு தடை விதித்தது தொற்று நோயியல் பிரிவு

de311d121106bbba9a46dd267c94d8e5 XL
de311d121106bbba9a46dd267c94d8e5 XL

கொரோனா வைரஸ் அச்சம் நாட்டில் பரவலாக உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சிப் போன்ற பாரிய அளிவலான நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் பலர் கலந்து கொள்வதனால் தற்போதைய நிலையில் அது சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தலைமை தொற்று நோயியில் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் இன்னும் நிலவுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பலர் முகக் கவசங்கள் இல்லாமல் செல்வதை அவதானிக்க முடிகிறது . ஆகவே தொடர்ந்து முகக் கவசம் அணியுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .