மைத்திரியை சந்தித்த இந்திய தூதுவர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 30
625.500.560.350.160.300.053.800.900.160.90 30

நடைமுறைப்படுத்தப்படவுள்ள 20 ஆவது திருத்த சட்டத்தினூடாக தற்போது நடைமுறையிலுள்ள13ஆவது திருத்த சட்டத்தை இரத்து செய்யுமாறு அரச தரப்பிலுள்ள பலரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நீண்ட பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இச்சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை அண்மைய நாட்களாக இந்திய தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.