மைத்திரி- ரணில் ஆட்சி யில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன – பிரமித்த பண்டார தென்னக்கோன்

Pramitha Bandara Tennakoon e1438518352594 432x300 1 720x380 1
Pramitha Bandara Tennakoon e1438518352594 432x300 1 720x380 1

மைத்திரி- ரணில் ஆட்சி காலத்தில்நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டதாகஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

“நல்லாட்சி அரசாங்கத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் காணப்பட்ட போதிலும் கடந்த ஆட்சியில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்தது மாத்திரம் அல்லாது அச்சுறுத்தல்களையும் முன்னெடுத்தனர்.

அத்துடன் அவை தொடர்பான கலந்துரையாடல்களை பதிவு செய்தார்கள் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுக்கள் என்பன காணப்பட்ட போதிலும் ஊழல் மோசடி எனும் ஆணைக்குழுவினை ஸ்தாபித்து அதனூடாக தமக்கு ஏற்றவாறு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

அப்போதைய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.