ரட்ணஜீவன் ஹுல் பக்கச் சார்பாகவே செயற்பட்டார் குற்றம் சுமத்தும் சுற்றுலாத்துறை அமைச்சர்!

Prasanna 1 2
Prasanna 1 2

ரட்ணஜீவன் ஹுல் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற ரீதியில் பேசப்பட்டதுடன் நல்லாட்சி அரசாங்கத்தினால் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிரிகள் அல்லர். ஆனால் சுயாதீனக் குழுக்கல் உரியமுறையில் இயங்க வேண்டும்.

கடந்த 2015 இல் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் முரண்பட்ட நிலையில் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அதன் உறுப்பினர்கள் பலர் தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர் போன்று செயற்படவில்லை. மொட்டுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறியிருந்தார். அதேபோல் தேர்தல் தொடர்பில் தன்னிச்சையாக வழக்கு தாக்கல் செய்தார்.

எனவே தான் நான் கூறுகின்றேன் ரட்ணஜீவன் ஹுல் போன்றவர்கள் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்வாங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.