மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று புதன் கிழமை இரவு (23) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்தினசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அயல் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில்; நேற்று இரவு 9 மணியளவில் சடலமாக மீடகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.