நல்லாட்சியிலேயே ரின்மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைந்தது என்கிறார் – அமைச்சர் பந்துல

Bandula Gunawardena
Bandula Gunawardena

கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட வரி குறைப்பு காரணமாக நாட்டின் ரின் மீன் உற்பத்தி வர்த்தகம் பெரும் பாதிப்படைந்ததென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு ரின் மீன் இறக்குமதி செய்வதற்காக கடந்த காலங்களில் வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது. உள் நாட்டிலும் இதற்கு சிறந்த சந்தை வாய்ப்பு இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பல ரின் மீன் உற்பத்தி நிறுவனங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் தரமான ரின்மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் திறந்த இறக்குமதி சூழ்நிலையில் பெரும்பாலனவர்கள் ரின் மீன் இறக்குமதி செய்ய முற்பட்டனர்.

அதன் விளைவாக உள்ளூர் ரின் மீன் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்