ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வழங்கப்படும் சாட்சியங்கள் குறித்து ஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

உதவி ஆயர்கள் மூவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடைய பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா ஆகியோருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று சாட்சியமளிகையில்; இந்த தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரின் ஆலோசகர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் குழுவொன்றை நியமிக்கும்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி தமக்கு அறிவித்ததாக பூஜித் ஜயசுந்த கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் தாம் கடும் அழுத்தத்துடனேயே செயற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.