சஹ்ரானின் வீட்டினுள் தோண்டப்பட்ட குழி- குற்றப்புலனாய்வு விசாரணை

sahran
sahran

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரும் தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் வீட்டில் மிகவும் இரகசியமாக இனந்தெரியாத நபர்களால் சுமார் 50 அடி ஆழத்துக்கு குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலாய்வுப் பிரிவு, பரந்தளவிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

வனாத்துவில்லு லெக்டோ தோட்டத்திலிருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினாரால் மீட்கப்பட்ட நிலையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டு சந்தேகநபர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இங்கிருந்தும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டியினர் சந்தேகம் தெரிவித்னர். இந்நிலையில், இந்த வீட்டில் குழி தோண்டப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டியின் விசேட பிரிவு, முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.