பேனாவை தூக்கவேண்டிய மாணவர்கள் வாளை தூக்குகின்றார்கள் சட்டத்தரணி க . தயாபரன்!

IMG 47212b016c212d2759f2614d1eb6bc25 V
IMG 47212b016c212d2759f2614d1eb6bc25 V

பேனையைத் தூக்குகின்ற மாணவர்கள் வாளை தூக்குகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது . இச்சம்பவம் வடகிழக்கில் இடம்பெறுகின்றது . ஆனால் சிங்களப்பிரதேசங்களில் இவ்வாறு மாணவர்கள் செய்கின்ற குற்றச் செயல்கள் குறைவாகவே காணப்படுகின்றது.

சிங்களப்பிரதேசங்களில் ஆவா குழுவோ அல்லது வேறு குழுக்களோ வாள் வெட்டில் ஈடுபடுவதாக நாங்கள் செய்திகள் கேட்பதில்லை . இது அனைத்தும் வடகிழக்கிலே காணப்படுகின்றது . தற்போது வவுனியாவிற்கும் அவ்வாறான குழுகள் வந்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம் இந்நிலையை மாற்ற பெற்றோர்கள் முன்வரவேண்டும் .

இவ்வாறு இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றும்போது பாடசாலையின் அபிவிருத்திச்சங்க செயலாளரும் சட்டத்தரணியுமான கந்தசாமி தயாபரன் தெரிவித்துள்ளார் .

அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உங்களுடைய பிள்ளைகளை இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக வைத்துக்கொள்ளவும் இன்றைய தகவல் தொழில்நுட்பம் அனைத்து விடயங்களையும் ஒரு நொடிப்பொழுதில் பார்த்துவிடுவதற்கு வசதி வழங்கி விடுகின்றது.

இன்று வவுனியா மாவட்டத்தில் நகர்ப்பகுதியில் போதை பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக்காணப்படுகின்றது . ஹெரோயின், கஞ்சா, மாவா போன்ற போதைப்பொருட்களை அவர்கள் உட்கொள்கின்றார்கள் ஒரு கிராமுக்கும் அதிகமாக ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை அவர்களது உடமையில் வைத்திருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் .

ஐந்நூறு மில்லிக்கிராம் ,அரைக்கிராம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் . அவ்வாறு அரைக்கிராமுக்கு அதிகமான போதைப் பொருட்களை வைத்திருந்தால் சாதாரணமாக அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணை இல்லை. அவ்வாறு பிணை வழங்கவேண்டுமாக இருந்தால் மேல் நீதி மன்றத்தில் தான் பிணை விண்ணப்பம் செய்யப்படவேண்டும். அவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான காரணங்கள் காணப்படவேண்டும் .

அவ்வாறு காணப்படாவிட்டால் பிணை வழங்கப்படமாட்டாது மூன்று கிராம் வைத்திருந்தால் அவருக்க மரண தண்டனை வழங்கப்படும் இதை உங்களுடைய பிள்ளைகளிடம் கூறுங்கள். இவ்வாறு பாரதூரமான தண்டனைகள் இலங்கையில் கொலைக் குற்றச்சாட்டை விடவும் போதைப் பொருள்பாவனைக்கான தண்டனை அதிகரித்து காணப்படுகின்றது.

பிரத்தியோக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் நடந்துகொள்ளும் முறைகளை வந்து பார்த்துக்கொள்ளுங்கள் நான் இதற்காக கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றேன் . எப்போது ஆபத்தை எதிர் நோக்குகின்றேனே தெரியவில்லை . என்று மேலும் தெரிவித்துள்ளார்.