அட்டாளைச்சேனையில் மாவட்ட விவசாய பயிற்சி நிகழ்வுகள்

vlcsnap 2020 09 29 15h30m12s827 2
vlcsnap 2020 09 29 15h30m12s827 2

வீட்டு பொருளாதர அலகுகளை மேம்படுத்தும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் 24 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்தும் இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாடுதழுவிய ரீதியில் இன்று (29) இடம்பெற்றன.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமைய ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவால் செயற்படுத்தப்படும் உள்நாட்டு அலகுகளுக்கு வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரதான நிகழ்வு அம்பாறை அட்டாளைச்சேனை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் என்.ரீ. மசூர், விவசாய போதனாசிரியர்கள், விவசாய தொழில் நுட்ப உத்தியோகத்ர்கள் மற்றும் சமுர்த்தி வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வளவாளர்களாக, நிலைய பண்ணை முகாமையாளர் எம்.வை.எம். நியாஸ் மற்றும் விவசாய போனாசிரியர்களான எம்.பிரேம்நாத், ஆர் விஜயராகவன் மற்றும் வீ.நிரூசன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இதன்போது, வீட்டுத்தோட்டச் செய்கை, நாற்று மேடை பராமரிப்பு, சுயவிதை உற்பத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் பயிர்ச் செய்கையில் சேதனப் பசளையின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பயிர்ச் செய்கையிளாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் வழங்கப்பட்டன.