20 ஆவது திருத்தத்தினால் எந்தவித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்!

22 5
22 5

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது போலவே, எதிர்க்கட்சியும் குழுவொன்று நியமித்துள்ளதாக அறிய முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 20 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டையே தாமும் கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கையையே அரசாங்கம் தற்போது கொண்டுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.