2 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறுகிறார் சுற்றாடல் துறை அமைச்சர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90
625.500.560.350.160.300.053.800.900.160.90

தேசிய மரக்கன்று நடும் வாரத்தில் நாடு முழுவதிலும்; சுமார் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற தேசிய மரக்கன்று நடும் வாரம் தொடர்பான ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் .

தேசிய மரக்கன்று நடும் வாரம் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதியன்று அநுராதபுரம் ருவன்வெலிசேயவில் ஆரம்பமாவிருப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன் போது தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான நிகழ்ச்சிகளின் போது நாட்டப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்திருந்தால் இலங்கையில் வன வளம் அதிகரித்திருக்குமென்றும்இதன் காரணமாக நடப்படும் ஒவ்வொரு மரக் கன்றுக்கும் உரிமையாளர் ஒருவரை பெயரிடுவதற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

குறித்த கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர , அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.