தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் போராடுவேன்: மணிவண்ணன்!

IMG 1822
IMG 1822

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனவும், மிக விரைவில் கட்சியின் பொதுச்சபை கூடி முடிவுகளை எடுக்கும் எனவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி மணிவண்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ்த் தேசிய கட்சிகளின் உடைவே சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னணியையும் உடைத்து நான் புதுக்கட்சியோ , அமைப்போ உருவாக்கி சிங்கள தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கில் ஆழ கால் ஊன்ற சந்தர்ப்பம் அளிக்க மாட்டேன்.

நான் கட்சியில் பதவிகள் வேண்டும் என ஆசைக்கொள்ள வில்லை கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன்..

எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.