நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதே ஐ.தே.கவின் தேவை

ravi
ravi

நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் அதனை தகர்த்தெறிந்து நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதே, ஐ.தே.கவின் தேவை என்றும் நாடு, தேசம், மதம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களுக்கும் கறும்புள்ளி ஏற்படும் வகையில் செயற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என சக்தி, எரிசக்தி மற்றும் வணிக மேம்பாடு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, கொழும்பு தொட்டலங்கையில், நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

பிரதான மூன்று முக்கிய விடயங்களை, தான் இங்கு முன்வைக்க விரும்புவதாகவும்

  • முதலாவதாக நாட்டின் பாதுகாப்பு,
  • நாட்டு மக்களின் பாதுகாப்பு,
  • இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம், என்பவையே அந்த மூன்றும் என்று தெரிவித்தார்.

பிரதான இந்த மூன்று காரணிகளிலேயே, நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகத் தெரிவித்ததுடன், ஆனால் இன்று, நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன், அந்தத் சதித்திட்டங்களைத் தகர்த்தெறியும் என குறிப்பிட்டுள்ளார்.