மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை!

IMG 5160
IMG 5160

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலட்சக்கணக்கில் இருக்கின்ற வேலையில்லா இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சனை, பெண் தலைமை தாங்கும் 30 ஆயிரம் குடும்பங்களின் ஜீவனோபாயம், போதனா வைத்தியசாலை வைத்திய உபகரணம் , வைத்தியர் பற்றாக்குறை பிரச்சனை மற்றும் மண்வளம் சுரண்டல், போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் வருடாந்த மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் நேற்று (04) மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள சத்துடனா உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இதன் போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 30 வருட காலமாக இயங்கி கொண்டுவருகின்ற ஒரு அமைப்பு இந்த மட்டக்களப்பு சிவல் அமைப்பு இப்போதுள்ள அரசியல் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளில் எங்கள் அமைப்பு முழுiதைமயாக ஈடுபடுத்திக் கொண்டது அந்த வகையில் சில முக்கிய பிரச்சனைகள் சிவில்சமூகத்துக்கு சவாலாக அமைந்திருந்தது அதில் தொல்பொருள் இடங்களை அடையாளம் இடும் நடவடிக்கை அதில் அரசால் நியமிக்கப்பட்ட செயலணியில் ஒரு சிறுபான்மை இல்லாத நிலை அதற்கு முதலில் விசனம் தெரிவிக்கின்றோம்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த செயலணியில்  பேராசிரியர் பத்மநாதன் போன்ற பல தகுதி வாய்ந்தவர்கள் சிறுபான்மை தமிழ் ,முஸ்லீம் சமூகத்தில் இருக்கின்றார்கள். எனவே அவர்களை உள்வாங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் பிரதமதந்திரியிடமும்  சிவில் சமூகம் கோரிக்கை முன்வைக்கின்றோம். அதேபோல அடையாம் காணப்பட்ட பகுதிகளில் உள்ளூர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்  அரசாங்கம் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எமது மாவட்டம் சகல துறைகளிலும் பின் தங்கிய மாவட்டம் முக்கியமாக கல்வி சுகாதாரம், இருந்த போதும்  மாவட்டத்துக்கு அப்பாலும் சேவை வழங்குகின்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்திய பற்றாக்குறை வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை போன்றவற்றை உடனடியாக அரசாங்கம் கரிசனை செய்து நிவர்திக்கப்பட வேண்டும்.

விவசாய அமைச்சர் எமது சிவில் சமூகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டவர் என்பதனால் அவர் மிகவிரைவில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது  விவசாய திட்டங்களுடன் அவரை எமது அமைப்பின் குழு சந்திக்கும் அதில் குறிப்பாக சிறிய நடுத்தர குளங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கின்றோம்.

அதேவேளை அமரர் கே.டபிள்யூ. தேவநாயகம் அவர்களால் கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு  விவசாய பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்டது அதை ஆரம்பித்த அவர் பிரசித்திபெற்ற ஒரு விவசாயி இருந்தபோதும் கூடிய நெல்லை உற்பத்தி செய்கின்ற மாவட்டம் இங்கு பல தகுதி வாய்ந்த விவசாய நிபுணர்கள், விரிவுரையாளர்கள்  இருக்கின்றனர் இவர்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் வேலை இல்லாத் திண்டாடங்களில் முதன்மை பெறுகின்றது இலட்சக் கணக்கில் இளைஞர் யுவதிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். அவ்வாறே பட்டதாரிகள் 8 வருடங்களாக வேலையில்லாமல் இருக்கின்றனர் எனவே அரசாங்கம் இந்த வேலையில்லாதவர்களின் பிரச்சனைக்கு உடன் தீர்வு காணவேண்டும். 

அவ்வாறே இயற்கையாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்கள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை இவர்களின் ஜீவனோபாயத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறே சிவில் சமூக சுதந்திரம் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதை குறைக்கவேண்டும் 

மாவட்டத்தில் மண்வளம் சுறண்டப்படுவது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாது எல்லா பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது.  வயல் பிரதேசம் மட்டுமல்ல கடல் பகுதிகளிலும் இவை மோசமான முறையில் நடைபெறுகின்றது.

இந்த மண்ணை பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து கனரக வாகனங்களில் இந்த மண்ணை கொள்ளையடித்து செல்கின்றனர். இதை அரசில்வாதிகளினாலும் தடுக்க முடியாத துர்ப்பாகிய நிலையிருந்தது ஆகவே இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவில் பிரதானமாக இந்த மண் கொள்ளையை நிறுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.