மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வெளியில் நடமாட தடை

Mass
Mass

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6.00 முதல் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முன்னதாக கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, வெயாங்கொட காவல்துறை பிரிவுகளில் உள்ள பகுதிகளுக்கு முன்னதாக காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.