வவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் சடலம் மீட்பு!

IMG 8f7d7c357e7615d8d3fb6df806f65710 V 01 2
IMG 8f7d7c357e7615d8d3fb6df806f65710 V 01 2

வவுனியா பட்டக்காடு பகுதியில் பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் தவறி வீழ்ந்து இரானுவ புலனாய்வாளர் ஒருவர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த சம்பவம் இன்று (09.10.2020) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வுனியா பட்டக்காடு பகுதியில் போதைப்பொருள் சந்தேக நபர்களை பிடிப்பதாக குறித்த இரானுவ புலனாய்வாளர் சென்ற சமயத்தில் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

அவர்களை திரத்திச் சென்ற சமயத்தில் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் தவறி வீழ்ந்து இரானுவ புலனாய்வாளர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

குறித்த சம்பவத்தில் மாத்தறை பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதேவேளை கிணற்றுக்குள் சடலம் இருப்பதை அவதானித்த அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.

பிரதே பரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

IMG bd30f31cb4c9ba69c0f98b102040431b V 01 1068x601 2
IMG bd30f31cb4c9ba69c0f98b102040431b V 01 1068×601 2