தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

474
474

க.பொ.த. உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பரீட்சை மத்திய மத்திய நிலையங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அந்த நடவடிக்கைக்காக பொலிஸார் மற்றும் போக்குவரத்துத் பிரிவினரின் ஒத்துழைப்பை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் ஆராய இன்று (09) கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக பிரத்தியேக பரீட்சை நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையங்களிலும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்திருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கிருமி தொற்று நீக்கம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகார பிரிவுகளில் பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை மத்திய மத்திய நிலையங்களை ஏற்படுத்தி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வந்து பரீட்சை எழுத கூடிய சுமூகமான சூழலை ஏற்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.