ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முற்படும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம்

kumara welgama
kumara welgama

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடாத நிலையில் கட்சி ஆதரவாளர்களை குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது எனவும் சுதந்திரக் கட்சியை உடைக்க முற்படும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர்களை தவிர வேறு எவருக்கும் வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் நேற்று (Nov.05) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சம்மேள கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய குமார வெல்கம,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் எனவும், அதற்காகவே சந்திக்கா குமரதுங்கவை நிகழ்வுக்கு அழைத்தாகவும் சந்திக்கா பண்ராநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தயாசிறி ஜயசேகர நடத்தி காண்பிக்குமாறு தெரிவித்ததுடன் எதிர்வரும் தேர்தலில் எதிர்பார்க்கப்படும் முடிவு கிடைத்தால் தயாசிறி ஜயசேகரவை காதில் பிடித்து வெளியில் வீசுவுதாகவும் அவர் தெரிவித்ததுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இல்லாததன் காரணமாக 35 பேரை கொண்ட வாக்குச்சீட்டில் எவருக்கும் வாக்களிக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான உரிமை மக்களுக்கும் உள்ளதால் அவர்கள் தனக்கு விருப்பமானவருக்கு வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.