மேற்கொள்ளப்பட்டுள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சீ.ஆர் பரிசோதனைகள்!

இலங்கை முதலீட்டுச் சபைக்கு கீழுள்ள தொழிற்சாலைகளில் தற்போதைய நிலையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

முதலீட்டுச் சபைக்கு கீழுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அவதான நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை முதலீட்டுச் சபை கடந்த சில மாதங்களாவே தயாராக இருந்து நிலையில், அதற்காக சுகாதார பிரிவினரை இணைத்துக் கொண்டு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை செயற்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.