வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மரநடுகை திட்டம் ஆரம்பம்

DSC00600
DSC00600

மருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ்நோக்கிய மரநடுகைத்திட்டம் ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த மரநடுகை திட்டத்திற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனுசரணை வழங்கியுள்ளதுடன், அவற்றினை வளர்த்து பராமரிக்கும் பணிகளை மருதம் பசுமை இயக்கம் இரண்டு வருடங்களிற்கு தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது. முதற்கட்டமாக 600 மரங்கள் ஏ9 வீதிக்கரைகளின் இருமருங்கிலும் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நிகழ்வில் அரசஅதிபர் சமன்பந்துலசேன, வவுனியா வளாகத்தின் முதல்வர் மங்களேஸ்வரன், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், மருதம் பசுமை இயக்கத்தின் நிறுவுனர் வேலுப்பிள்ளை தனபாலசிங்கம்,வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள், சுற்றாடல் அதிகார சபையினர், சமூக ஆர்வலர்கள், இயற்கை நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.