யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 116 வழக்குகள் பதிவு!

யாழ். மாவட்டத்தில் செப்ரம்பர் மாதம் மாத்திரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 116 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்குகள் காலாவதி, விலைப்பட்டியலின்மை, உத்தரவாதமின்மை, இறக்குமதி விபரமின்மை, எஸ்.எல்.எஸ் தரச் சான்றுதலின்மை, கட்டுப்பாட்டு விலையினை மீறியமை மற்றும் பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக பதியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 வழக்குகளுக்கு ரூபா 4 இலட்சத்து இரண்டாயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது என உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.