வைரவ புளியங்குளத்தில் விபத்து; இளைஞன் படுகாயம்!

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24.) காலை 10.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த ஹன்ரர் ரக வாகனம் வைரவர் கோவில் வீதி, முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையூடாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதுண்டு, வேகக்கட்டுப்பாட்டையிழந்து அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.