ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக, விசேட வேலைத்திட்டம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 16 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 16 2

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக, விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு, மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மதித்து செயற்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கி இருந்த 240 பேர் இன்று தங்களது தனிமைப்படுதல் காலத்தை நிறைவு செய்து வீடுதிரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 நோய்த்தொற்று தடுப்பு தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 57 ஆயிரத்து 221 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.

தற்போது 74 தனிமைப்படுத்தல் முகாம்களில் 8 ஆயிரத்து 158 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.