இனி தனிமைப்படுத்தல் மையங்கள் இல்லை: வீடுகளே தனிமைப்படுத்தல் மையங்கள்!

Army.Commander.Lieutenant.General.Shavendra.Silva 1
Army.Commander.Lieutenant.General.Shavendra.Silva 1

கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இன்று முதல் வீடுகளில் தனிமைப்படுத்துவதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் இனி மேல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதுவரை, தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதை தொடர்ந்து, அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.