மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ள விடயம் !

download 1 20
download 1 20

மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் தாங்கள் பயணித்துள்ள பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை காவல்துறை தலைமையகத்திற்கு அறியத்தருமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறு கண்டறியப்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.