இலங்கையில் கொரோனா தொற்றினால் 20 ஆவது மரணம் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டடுள்ளது.