நாளை யாழ் விஜயத்தினை மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி

chandrika 1 1
chandrika 1 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரும் மக்கள் சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

மக்கள் சந்திப்புக்களை நடத்துவதற்காக நாளை (Nov.11) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலாவது மக்கள் சந்திப்பினை மேற்கொண்டதன் பின்னர் தெல்லிப்பழை, சங்கானை போன்ற இடங்களில் உள்ள மக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.