மன்னார் உயிலங்குளம் பகுதியில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

1 2 1
1 2 1

மன்னார் காவற்துறை பிரிவுக்குட்பட்ட மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் வண்ணாமோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமர் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை மன்னார் காவற்துறையினர் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

2 2
2 2


மீட்கப்பட்ட கேரள கஞ்சா 20 கிலோ 555 கிராம் எடை கொண்டது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார்  பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.பி. ஐயதிலகவின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றி உள்ளனர்.


 மேற்படி கஞ்சா உயிலங்குளம் வண்ணாமோட்டை காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த கஞ்சா பொதிகள்  மன்னார் மாவட்ட நீதிமன்றில் கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.