கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே பலர் சமூகத்தில் இருக்கக்கூடும்- முன்னாள் சபாநாயகர் ..

d 3
d 3

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே பலர் சமூகத்தில் இருக்கக்கூடும். அவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமலேயே துரதிஷ்டவசமாக மூன்று முதியவர்கள் நேற்று உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை விரைவாக இனங்கண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய பலர் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை மேல்மாகாணத்தில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அறியாமல், அதனை மற்றவர்களுக்குப் பரப்புவதிலிருந்து விலகியிருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.