கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி இடம்பெற்ற சிறப்பு வழிபாடு!

20201107 193103
20201107 193103

கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரியகுளம் நாகவிகாரையில் விசேடவழிபாடு நடாத்தப்பட்டது.

குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்து​​றை மா அதிபர் ,யாழ் மாவட்ட பிரதி காவல்து​​றை மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல்து​​றையினர் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள சுகாதார நடைமுறைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த வழிபாடு சிறப்பாக இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் மாலை 7 மணி அளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு “பிரித்” ஓதும் நிகழ்வும் இடம்பெற்றது நிறைவில் தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.