முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அழுத்தங்களில் இருந்து வெளிவர அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

ujirilai sirikaran anna 1
ujirilai sirikaran anna 1

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மன ரீதியான அழுத்தங்களில் இருந்து வெளிவர எமது அமைப்பு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு உயிரிழை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதி மாங்குளத்தில் இயங்கி வருகின்ற உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினுடைய ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (13)காலை 11.00 மணிக்கு உயிரிழை அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது

இதன்போது உயிரிழை அமைப்பின் தலைவர் லோ.சிறீகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

உயிரிழை அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்வரும் டிசம்பர் 03 ம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாங்குளத்தினை தளமாக கொண்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் கீழ் 210 பேர் அங்கம் வகிக்கின்றார்கள். இதில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களையும் பராமரித்து வருகின்றோம்


கடந்த போருக்கு பின்னர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பலபேர் சரியான பராமரிப்பு வசதிகள் மருத்துவ வசதிகள் இன்றி இறந்த நிலை காணப்பட்ட போதுதான் உயிரிழை அமைப்பு தொடங்கப்பட்டது.

வடக்கு கிழக்கினை சேர்ந்த அனைத்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களையும் இணைந்து அவர்களுக்கான மருத்துவ வசதிகள்,மாதாந்த உதவிகள்,வாழ்வாதாரம் போன்றனவற்றை முடிந்த வரையில் பாராபட்சம் இன்றி மேற்கொண்டு வருகின்றோம்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் சமுதாயத்தில் வளர வேண்டும் என்று அவர்களின் கல்வி செயற்பாட்டிற்கும் உதவி வருகின்றோம்.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட காலத்தில் இருந்து மனரீதியான தாக்கத்தினை அடைகின்றார்கள் இதில் இருந்து மீட்பது கடினமான செயல். ஒதுங்கி வாழும் தன்மையினை அவர்களுக்குள் வளர்த்துக்கொள்கின்றார்கள் இதில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையில் விளையாட்டுப் போட்டியினை தெரிவு செய்து நடத்துகின்றோம்.

விளையாட்டுப்போட்டிகள் உடல் ரீதியான உற்சாகத்தினையும் மனரீதியான தன்னம்பிக்கையினையும் ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பலர் விளையாட்டு ஊடகாவே வெளியுலகத்தினை தொட்டு நிக்கின்றார்கள். எங்கள் தேசத்திலும் திறமையுடையவர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கான அடித்தளம்,பயிற்சிகள்,ஊக்கிவிக்கும் செயற்பாடுகள் எங்கள் இடத்தில் இன்னும் இல்லை இந்த நிலையினை மாற்றி எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுக்களிலும் எங்கள் வீரர்களும் கலந்துகொள்ள வைக்கவேண்டும் என்பதற்காவே இந்த விளையாட்டினை நடத்துகின்றோம்.

சக்கரநாற்காலி,கூடைப்பந்தாட்டம்,கரம்,சதுரங்கம் ,மரதன்ஓட்டம், போன்ற விளையாட்டுக்ளை நடத்தவுள்ளோம் இந்த ஆண்டு அவுஸ்ரேலியா ரொட்டறிக்கிளப் இந்த ஆண்டு விளையாட்டுப்போட்டியினையும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினைத்தினையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.

அவுஸ்ரேலியா,இந்தியா,கொழும்பு,கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த ரொட்டறிக்கிப்புக்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்து கொள்கின்றன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணாமாக அதற்கான அனுமதிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம் எதிர்வரும் 28 ஆம் திகதி போட்டிகளை தொடங்கி 03.12.2020 அன்று வரை நடைபெற்று அரங்க நிகழ்வுகள் நடைபெறும் இதற்கான ஒத்துழைப்பினை அனைவரும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்ககை விடுத்துள்ளார்கள்.

இந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விடையங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களின் தேவைகளும் தடைகளும் பாரதூரமானதாக காணப்படுகின்றது அதனை நீக்கும் வழியாக விளையாட்டு அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்