கரைச்சி பிரதேச சபை நிர்வாக செயற்ப்பாடுகள் மீது காவல்துறையினர் நெருக்கடி

1 11
1 11

கரைச்சி பிரதேசசபை நிர்வாக செயற்ப்பாடுகள் மீது கிளிநொச்சி காவல்துறையினர் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கரைச்சிப் பிரதேச சபையினால் வருடாந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மரநடுகை செயற்த்திட்டத்தினை நிறுத்துமாறு கிளிநொச்சி தலைமை காவல்துறை அதிகாரி கடிதம் எழுதி உள்ளமையானது,1987ம் ஆண்டு பிரதேச சபைகள் கட்டளை சட்டத்திற்கு அமைய அதிகார துஸ்பிரயோகம் என்பதுடன் கௌரவ சபைகளினுடய தத்துவங்களுக்குள் அத்துமிறி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் என கரைச்சி பிரதேசசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிக்கு பதில் கடிதம் எழுதி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றுக்கு பிரதி இட்டுள்ள தவிசாளர பிரதேச சபைகளுடைய மரநடுகை செயற்த்திட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசிப்பார்க்க காவல்துறையினர் விரும்புகிறார்கள்.

கொரோனா ஏற்பாடுகளை ஒரு சமூகத்தை அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள். எனினும் நாளைய தினம் திட்டமிட்டபடி மர நடுகை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டால். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேசசபைகளை முடக்கி கிளிநொச்சி காவல்துறையினரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக கொரோனா நடைமுறைகளை பின்பற்றி போரட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.