காரைதீவில் சிகைஅலங்கார நிலையங்களை மூடுமாறு பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள் !

jeyasril Cmn 300x225 1
jeyasril Cmn 300x225 1

அக்கரைப்பற்று பகுதியில் கொரோனாத் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து காரைதீவில் சிகையலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு காரைதீவு பிரதேசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அறிவித்துள்ளார்.

பிரதேசத்தில் பரவி வரும் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்குமுகமாக காரைதீவுப் பகுதியில் மரக்கறி, மீன், ஐஸ்பழம், தும்புமிட்டாய், இரும்பு, அங்காடி ஆகிய வியாபாரங்களைச் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் பிரதேச கொரோனா வழிகாட்டல் குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வியாபாரம் இடம்பெற்றால் பொதுமக்கள் பின்வரும் இலக்கங்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம்.

தவிசாளர் 0773100852, செயலாளர் 0760965641 தொழில்நுட்பவியலாளர் 0774961435 வருமான பரிசோதகர் 0772634100.

மீறுவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தவிசாளர் ஜெயசிறில் ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளார்.