54 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா நாகர் இலுப்பைக்குளம் உள்ளக வீதிக்கு காப்பற் இடும் பணிகள் ஆரம்பம்!

DSC05381
DSC05381

வவுனியாமாவட்டத்தின் நாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதிக்கு காப்பற் இடும் பணிகள் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விசேட வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக ஒரு லட்சம் கிலோமீற்றர் நீளமான வீதிகள் புனரமைப்பு பணிகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் 4 கிலோமீற்றர் நீளம் கொண்ட வவுனியா நாகர்இலுப்பைக்குளம் உள்ளக வீதிக்கு காப்பற் இடும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும் , வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கு.திலீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பதினைந்து வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமல் காணப்பட்ட குறித்த வீதி திருத்தப்பணிக்களிற்காக 54 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வீதி திருத்தப்பணிகளை ஆரம்பித்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்திருந்தார்.

இவ் நிகழ்வில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC05405
DSC05405
DSC05366
DSC05366