கல்முனையில் 14 பேருக்கு கொரோனா!

கல்முனை பகுதியில் இன்று காலை 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்தார்.

அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.