இங்கிலாந்திற்கெதிராக நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

eng vs nz
eng vs nz

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 353 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 9விக்கட் இழப்பிற்கு 615 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. வொட்லிங் 205 ஓட்டங்களையும், மிட்சல் சான்ட்னர் 126 ஓட்டங்களையும், கிரான்ட்கோம் 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

டென்லி 35 ஓட்டங்களையும், ஆர்ச்சர் 30 ஓட்டங்களையும், சாம் ஹரன் 29 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் வோக்னர் 5 விக்கட்டுக்களையும், சான்ட்னர் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக வொட்லிங் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.