ஹொங்கொங் உள்ளாட்சித் தேர்தல்

honkong
honkong

போராட்டம் மற்றும் வன்முறையால் நிலைகுலைந்துள்ள ஹொங்கொங்கில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

ஹொங்கொங்கில் உள்ளாட்சி தேர்தலிற்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகியிருக்கிறது.

இந்த தேர்தல் ஹாங்காங்கின் நிருவாக தலைவர் கேரி லாமின் ஆதரவிற்கான ஒரு சோதனையாக கருதப்படுகின்றமையினால் 6 மாதங்களாக அரசு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போதைய அரசுக்கு மக்களிடம் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை காட்டும் தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது.

போராட்டம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில் அதற்கு நேர் மாறாக காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதனால் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.