1 இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி!

1ae009aedb8cba979002fb706a0c33f0 XL
1ae009aedb8cba979002fb706a0c33f0 XL

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 621 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு இரண்டாவது இன்னிங்ஸிற்காக இலங்கையணிக்கு பாரிய சவாலொன்றை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதன்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.