மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

sanju samson
sanju samson

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06ம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்திருந்தார்.

சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் விலகியமையினால் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.