ஸ்மார்ட் போன்களிற்கு பதிலாக கோழிக்குஞ்சுகள்

indonesia
indonesia

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு ஸ்மார்ட் போன்களிற்கு குழந்தைகள் அடிமையாவதை தவிர்க்கும் வகையில் புதிய முயற்சியாக பள்ளிக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டங் நகரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நகர மேயர் டேனியல் கூறுகையில்,

‘இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவர். இணையதளம் மற்றும் தொலைபேசி விளையாட்டுக்களில் இருந்து விலகி இருப்பர்.

கோழிக்குஞ்சுகளை வளர்ப்பது மாணவர்களுக்கு மதிப்புமிக்க திறன்களை கற்பிக்கும் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும். கோழிக்குஞ்சுகளை நன்கு வளர்க்கும் குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.