வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் வங்காளதேசம் வெற்றி!

202101221837094438 Tamil News BANvWI 2nd ODI bangladesh beats west indies and won series SECVPF
202101221837094438 Tamil News BANvWI 2nd ODI bangladesh beats west indies and won series SECVPF

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 148 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பொவோல் அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார்.

வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், முஷ்டாபிஜுர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.