ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸ் சதத்துடன் இங்கிலாந்து போராட்டம்

root burns
root burns

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட், ரோரி பேர்ன்ஸின் சதத்துடன் போராடி வருகின்றது.

நியூசிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸில் 375 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

நியூசிலாந்து சார்பாக டொம் லதம் 105 ஓட்டங்களையும், மிட்சல் 73ஓட்டங்களையும், வொட்லிங் 55 ஓட்டங்களையும், டெய்லர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவர்ட் புரோட் 4 விக்கட்டுக்களையும், கிரிஸ் வோக்ஸ் 3விக்கட்டுக்களையும், சாம் ஹரன் 2 விக்கட்டுக்களையும், ஆர்ச்சர் 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து இன்றைய 3ம் நாள் ஆட்டத்தின் தனது முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 101 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்தின் பந்துவீச்சில் ரிம் சௌதி 2 விக்கட்டுக்களையும், மட் ஹென்ரி, வோக்னர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

நாளைய தினம் 4ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.