நேபாள வீராங்கனை கிரிக்கட்டில் புதிய சாதனை!!

nepal
nepal

13-வது தெற்காசிய விளையாட்டு விழாவில்நேற்றுமுன்தினம் (Dec.02) நடைபெற்ற மாலைத்தீவு – நேபாளம்
அணிகளுக்கிடையில் நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் நேபாள நாட்டு வீராங்கனை அஞ்சலி சந்த், 13 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நாணய சுழற்சியில் வென்ற மாலைத்தீவு அணியின் தலைவி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மாலைதீவு 10.1 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தப் போட்டியில் நேபாள அணிக்காக அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய 24 வயதான அஞ்சலி சந்த் 2.1 ஓவர்கள் பந்து வீசி ஓட்டங்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

இந்த ஆறு விக்கெட்டுக்களில் ஹட்ரிக் விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தார். அத்துடன் ஒரு ஓட்டங்களையும் கொடுக்காது 06 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

பின்னர் 17 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய நேபாள பெண்கள் அணி 0.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அஞ்சலி சந்த் ஆட்டநாயகி விருது பெற்றார்.